அறிவுசார் சொத்துரிமை நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:29, 13 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 11 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day) ஆண்டு தோறும் ஏப்ரல் 26 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது[1]. "மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும்" இந்நிகழ்வு 2001 இல் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization, WIPO) ஆரம்பிக்கப்பட்டது[1]. ஏப்ரல் 26 ஆம் நாளிலேயே அறிவுசார் சொத்துரிமை அமைப்பு உருவாக்கப்பட 1970 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வின் கருப்பொருள்கள்:

  • 2001 - எதிர்காலத்தை இன்று அமைத்தல்
  • 2002 - ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல்
  • 2003 - அறிவுசார் சொத்துரிமையை உங்கள் வணிகமாக்குங்கள்
  • 2004 - ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல்
  • 2005 - சிந்தி, கற்பனை செய், ஆக்கு
  • 2006 - கருத்துடன் இது தொடங்குகிறது
  • 2007 - ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல்
  • 2008 - கண்டுபிடிப்புகளைக் கொண்டாடுதல், அறிவுசார் சொத்துரிமையை மதித்தல்[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]